கொழும்பில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசனின் வாகன சாரதி மற்றும் அவரது தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலர் ஆகியோர் மீது பாரந்தூக்கி வாகனம் மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் (30) இரவு இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் விபத்துக்குள்ளான இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு அதிகாரிகள், உடனடியாக பாரந்தூக்கியின் சாரதியை கைது செய்துள்ளனர்.
மேலும், சாரதி பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவரது சக வேட்பாளர், லோஷனும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே, இவ்விபத்து இடம்பெற்றது.இந்நிலையில் விபத்து தொடர்பான ஏனைய விசாரணைகளை, மட்டகுளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.