சுமார் 6,798 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள இந்திய புகையிரத அமைச்சின் இரண்டு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) அனுமதி கிடைத்துள்ளது.
இரண்டு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களான நர்கதியாகஞ்ச்-ரக்சால்-சீதாமர்ஹி-தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி-முசாபர்பூர் ஆகிய பகுதிகளை 256 கிமீ தூரம் வரை இரட்டிப்பாக்குவது மற்றும் எர்ருபலம் மற்றும் நம்பூரு இடையே அமராவதி வழியாக 57 கிமீ தூரத்திற்கு புதிய பாதை அமைப்பது என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நர்கதியாகஞ்ச்-ரக்சௌல்-சீதாமர்ஹி-தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி-முசாபர்பூர் பகுதிகளை இரட்டிப்பாக்குவது நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் எல்லைப் பகுதிகளுக்கான இணைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில்களின் இயக்கத்தை எளிதாக்கும் என்பதோடு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரயில் பாதை திட்டம் எர்ருபாலம்-அமராவதி-நம்பூர் என்டிஆர் விஜயவாடா மற்றும் ஆந்திராவின் குண்டூர் மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டம் வழியாக செல்கிறது.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் பீகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு திட்டங்களும் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்புடன் சுமார் 313 கி.மீ இணைக்கப்படுகிறது.
புதிய திட்டம் 9 புதிய நிலையங்களுடன் சுமார் 168 கிராமங்களுக்கும், சுமார் 12 இலட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும். இந்தத் திட்டம் இரண்டு சீதாமர்ஹி மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கிறது. 388 கிராமங்கள் மற்றும் சுமார் 9 இலட்சம் மக்கள் நன்மை பெறுவர்.
விவசாயப் பொருட்கள், உரம், நிலக்கரி, இரும்புத் தாது, சீமெந்து போன்ற பொருட்களின் போக்குவரத்துக்கு இவை அத்தியாவசியமான வழித்தடங்களாகும். அத்தோடு கூடுதல் சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.
இரயில்வே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், காலநிலை இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் தளவாடச் செலவைக் குறைப்பதற்கும், 7 கோடி மரங்களை நடுவதற்குச் சமமான கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாதை முன்மொழிவு ஆந்திரப் பிரதேசத்தின் “அமராவதி” நகருக்கு நேரடி இணைப்பை வழங்கும் அத்தோடு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் படி, இந்தத் திட்டம் இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மையை வழங்குவதோடு தொழிற்சாலைகள் மற்றும் மக்களுக்கான இயக்கத்தை மேம்படுத்தும்.
இந்த பல்துறை திட்டம் செயல்பாடுகளை எளிதாக்கும் என்பதோடு நெரிசலைக் குறைக்கும், இந்திய ரயில்வே முழுவதும் மிகவும் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டை வழங்கும் எனவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூறியது.