கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு உள்நாட்டில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக கூடியுள்ளனர். இது கட்சிக்குள் ஆழமான பிளவைக் குறிக்கிறது என்று சிபிசி செய்தி கூறுகிறது.
சபை அமர்வு நடைபெறும் நாட்களில் வழக்கமான வாராந்த கூட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ரகசிய சந்திப்பு நடந்துள்ளதோடு அதிருப்தி எம்.பி.க்கள் தங்கள் கவலைகளை நேரடியாக ட்ரூடோவிடம் தெரிவிக்க வாய்ப்பை வழங்கியது. 24 லிபரல் எம்.பி.க்கள் பிரதமர்
இராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், ட்ரூடோ தனது எதிர்கால தலைமையை தீர்மானிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, பிரித்தானிய கொலம்பியா பாராளுமன்ற உறுப்பினர் பெட்ரிக் வெய்லர், ட்ரூடோவின் ராஜினாமாவுக்கு ஆதரவான ஆவணத்தை சமர்பித்தார். ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிட விரும்பாததைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்குள் புது மறுமலர்ச்சி ஏற்பட்டது .அதற்கு இணையாக அடுத்த தேர்தலுக்கு முன்னதாக லிபரல் கட்சி இதேபோல் தலைமை மாற்றத்தால் பயனடையலாம் என்று பெட்ரிக் வெய்லர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு எம்.பி.க்கும் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அங்கு ஏறக்குறைய 20 உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தலுக்கு முன் ட்ரூடோவை ஒதுங்குமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களில் யாரும் அமைச்சரவை பதவிகளை வகிக்கவில்லை.பெரும்பான்மையானவர்கள் அவரது ராஜினாமாவுக்கு அழுத்தம் கொடுத்த போதிலும், பல எம்.பி.க்கள் பிரதமருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இது பிளவுபட்ட கூட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.
குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், தனது சகாக்களின் விரக்தியை ஏற்றுக் கொண்டதோடு பதற்றங்களை நிவர்த்தி செய்ய முயன்றார். “அடிப்படையில், இது சில காலமாக கொதித்துக்கொண்டிருக்கும் விடயம், பிரதமாரால் உண்மையைக் கையாளலாம் என்பதில் உறுதியாக இருக்க முடியும்,” என்று மில்லர் செய்தியாளர்களிடம் கூறியதாக சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
எம்பிகளுடனான சந்திப்பின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம், ட்ரூடோவின் ராஜினாமா அழைப்பின் பின்னணியில் உள்ள யதார்த்தத்தை கோடிட்டுக் காட்டவதோடு உள்ளக பிளவையும் வெளிக்காட்டுகிறது.
எதிர்வரும் காலத்தில் கனடாவின் அரசியல் நிலப்பரப்பில் செல்வாக்கு செலுத்தும் வகையில் தலைமைத்துவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.