பாளி மொழியில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் போதனைகள், காலநிலை பேரழிவுகள், பொருளாதார கஷ்டங்கள் மற்றும் சமூக மோதல்கள் போன்ற சமகால சவால்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை எவ்வாறு வழங்குகின்றன என்பது பற்றி ஆராய்வதற்காக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபிதம்மா திவாஸில் உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் மற்றும் பிக்குமார்கள் கூடினர்.
அறிஞர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கண்ட இந்த நிகழ்வு, கலாச்சார அமைச்சுடன் இணைந்து சர்வதேச பௌத்த கூட்டமைப்பு (IBC) ஏற்பாடு செய்தது.
ஐக்கிய புத்த மிஷனின் பதந்த் ராகுல் போதி மகாதேரர், அபிதம்ம போதனைகள் மனித உணர்வு மற்றும் நெறிமுறைகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை எவ்வாறு வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டினார்.அதே சமயம் பிக்குணி ஷக்யா தம்மதினா, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் அவற்றின் தாக்கத்தை வலியுறுத்தினார்.
பௌத்த போதனைகளில், குறிப்பாக அபிதம்மத்தில் பொதிந்துள்ள ஞானம், இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு சாத்தியமான தீர்வுகளைக் கொண்டுள்ளது என்று அறிஞர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு அமர்வில், சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மகேஷ் தியோகர், இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பாளி மொழியின் வரலாற்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்தார்.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் பிரன்ஷு சமதர்ஷி, பாளியில் வளர்ந்து வரும் ஆர்வத்தை சுட்டிக்காட்டினார். புத்த மத ஆய்வுகளுடன் உலகளாவிய ஈடுபாடு அதிகரித்ததால், மொழி மூன்றாம் கட்ட மறுமலர்ச்சிக்கு உட்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது, புத்தரின் போதனைகள் பல நூற்றாண்டுகளாகப் பரவி வரும் புனித மொழியான பாளியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கத்தில் பல முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பாளி என்பது ஒரு மொழி மட்டுமல்ல, “ஒரு நாகரிகத்தின் ஆன்மா, அதன் கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம்” என்று அவர் வலியுறுத்தினார்.
“தர்மத்தைப் புரிந்துகொள்வதற்கு பாளி மிகவும் முக்கியமானது” என்று பிரதமர் மோடி கூறினார்.டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள், கல்வி பயன்பாடுகளின் மேம்பாடு மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் மொழியை உயிருடன் வைத்திருக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பாளி இனி பரவலாக பேசப்படாவிட்டாலும், அதன் இலக்கியம் மற்றும் ஆன்மீக மரபுகள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாரம்பரிய சிவர் தான விழாவையும் பிரதமர் நிகழ்த்தியதுடன், பௌத்த சங்கத்தின் மூத்த பிக்குகளுடன் அவர் கலந்துரையாடினார்.
அவர் தனது உரையில், பாளியை இந்தியாவின் செம்மொழியாக அங்கீகரித்ததை, பௌத்த ஆய்வுகளில் ஆழமான ஆராய்ச்சியையும் புலமையையும் வளர்க்கும் ஒரு முக்கிய சாதனையாகப் பாராட்டினார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாளி மொழிக்கு அங்கீகாரம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.இது இந்திய கலாச்சாரம் மற்றும் பௌத்த ஆய்வுகளை உலகளவில் ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
புத்த மத போதனைகளின் ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு அழைப்பு விடுத்து, மன மற்றும் நெறிமுறை ஒழுக்கம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதில் பண்டைய நூல்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
அறிஞர்களும் இளைஞர்களும் பாளியின் முக்கியத்துவம் மற்றும் இன்றைய உலகில் பௌத்த ஞானத்தின் நீடித்த பொருத்தம் பற்றி இங்கு ஆராய்ந்தனர்.(ANI)