Sunday, November 24, 2024
Home » Chatbot உடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்

Chatbot உடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்

- இல்லாத காதலியுடன் வாழ எடுத்த தவறான முடிவு

by Prashahini
October 25, 2024 1:55 pm 0 comment

AI உரையாடல் தொழில்நுட்பமான Chatbot உடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் [Daenero] கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி ChatGPTயுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.

சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு Chatbotயே கதி என்று இருந்துள்ளான்.

நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன், தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாத அந்த Chatbot உடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட Chatbot நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து சைன்ஸ் பிக்க்ஷன் சினிமாக்களில் கதையாக கூறப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலேயே நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT