இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டுமென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
மூதூரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
“தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இம்முறை அதிகளவான வாக்களிப்பினூடாக பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும். யாழ். மாவட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவம் இம்முறை குறைந்துள்ளது. முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 81 சதவீதமாக இருந்த தமிழ் மக்கள் தொகையானது தற்போது 24 சதவீதமாக குறைந்துள்ளது. அம்பாறையில் 18 சதவீதமாக அது குறைந்துள்ளது.
இதேவேளை தண்டவாளம் போன்று இனப் பிரச்சினைக்கான தீர்வையும் அபிவிருத்தியையும் இணைந்த வகையில் அரசியலை முன்னெடுப்பதே சிறந்தது” என மேலும் தெரிவித்தார்.
தம்பலகாமம் குறூப் நிருபர்