கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆடம்பர கார் விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெனானாண்டோ இன்று (23) குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்கிக் கொண்டுள்ளார்.
தமது சட்டத்தரணி ஊடாக நேற்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இதுபற்றி அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்தே வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதாக ஜோன்ஸ்டன் பெனாண்டோ தமது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்வதை தடுக்கும் வகையில், தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர் நீதிமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
இதன் அடிப்படையில் மேற்படி மனுவை எதிர்வரும் (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)