Sunday, November 24, 2024
Home » இலங்கையின் வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்ட புதிய கடவுச்சீட்டுக்கள் அறிமுகம்

இலங்கையின் வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்ட புதிய கடவுச்சீட்டுக்கள் அறிமுகம்

by Prashahini
October 22, 2024 10:58 am 0 comment

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக் காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் – கருநீல நிறம்
2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் – பழுப்பு சிவப்பு நிறம் (Maroon)
3. இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள், – சிவப்பு நிறம் கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது.

குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.

மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான இலங்கையின் சிறப்பு மிக்க மற்றும் வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ். நல்லூர் ஆலயம், வரலாற்று சிறப்புமிக்க காலி ஒல்லாந்தர் கோட்டை, ஸ்ரீ தலதா மாளிகை, கொழும்பின் தாமரை கோபுரம், சிகிரியா, ஒன்பது வளைவு பாலம், பொலன்னறுவையின் வரலாற்றுத்தளங்கள் உட்பட இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்,

4-5ஆம் பக்கத்தில் தலதாமாளிகை

6-7ஆம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்

8ஆம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்

9ஆம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்

10-11ஆம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்

12-13ஆம் பக்கத்தில் அனுராதபுர ருவன்வெலிசாய மகா விகாரை

14-15ஆம் பக்கத்தில் பதுளை ஒன்பது வளைவு பாலம்

16-17ஆம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி

18-19ஆம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்

20-21ஆம் பக்கத்தில் காலி கோட்டை

22-23ஆம் பக்கத்தில் கம்பஹா இறப்பர் தோட்டம்

24-25ஆம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்

26-27ஆம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்

28ஆம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்

29ஆம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை

30ஆம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்

31ஆம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை

32-33ஆம் பக்கத்தில் சிகிரியா குன்று

34ஆம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு

35ஆம் பக்கத்தில் யால தேசிய பூங்கா

36ஆம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்

37ஆம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்

38-39ஆம் பக்கத்தில் பொலன்னறுவை பழமை நகரம்

40-41ஆம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்

42-43ஆம் பக்கத்தில் சிவனொளிபாதமலை

44ஆம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு

45ஆம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை
என்பன அச்சிடப்பட்டுள்ளன.

ஒரு நாள் சேவையின் கீழ் 20,000 ரூபா கட்டணத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT