பிரான்ஸ் நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள 6 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் மூன்றாவது பெரிய நகரான லியோன், திரைப்பட விழா நடைபெறும் கான் உள்ளிட்ட நகரங்களும் இந்த சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்ெவள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பிரான்ஸின் 18 பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பின் நிமித்தம் பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நீர் சூழ்ந்துள்ள இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதன் மூலம் மக்கள் தங்களை ஆபத்துக்குளாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வெள்ளத்தினால் உயிரிழப்பு மற்றும் காயம் போன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
தெற்கு ஐரோப்பாவில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட கிர்க் சூறாவளியே பிரான்ஸில் வெள்ளம் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் சுமார் 630 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 48 மணித்தியாலயங்களில் பதிவானதாக பிரான்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.