Sunday, November 24, 2024
Home » வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பணம் திருட்டு
குருநாகல், வாரியபொல நீதிமன்றங்களில்

வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பணம் திருட்டு

by gayan
October 19, 2024 11:19 am 0 comment

குருநாகல், வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து 2 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாரியபொல நீதவான் நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவரே தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் 7ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றிருக்கலாமென்று அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வாரியபொல பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT