114
நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசங்க அபேவர்தன தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது அமைச்சின் கீழுள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கே புதிய தலைவரை நியமித்துள்ளார். அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சந்தன பண்டாரவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்ட நிலையிலேயே அவர் தனது அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.