Sunday, November 24, 2024
Home » சீன கம்யூனிஸ்ட் கட்சிச் சிறைகளில் 10,000 வெளிநாட்டவர்கள் தடுத்து வைப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சிச் சிறைகளில் 10,000 வெளிநாட்டவர்கள் தடுத்து வைப்பு

by Rizwan Segu Mohideen
October 18, 2024 4:04 pm 0 comment

சீன கம்யூனிஸ்ட் கட்சி நீதித்துறை கட்டமைப்பு ஒடுக்குமுறையின் ஒரு அரசியல் கட்டமைப்பு என்றும், அவுஸ்திரேலியர்களை மீட்பதற்கு மேலும் பலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒரு முன்னாள் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியர்கள் உட்பட சுமார் 10,000 வெளிநாட்டவர்கள் தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலிய செனட் குழுவிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணையில், முன்னாள் பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், தொழிலதிபருமான பீட்டர் ஹம்ப்ரே, கம்யூனிஸ்ட் ஆட்சியால் தவறாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஹம்ப்ரே மற்றும் அவரது சீன அமெரிக்க மனைவி 2013 இல் சட்டவிரோத “தகவல் சேகரிப்பு” என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு, தம்பதியினர் மோசடி விசாரணை ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்தனர். இது சீனாவில் வணிகம் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு ஆபத்துகளைத் தவிர்க்க உதவியது.

ஹம்ப்ரேயும் அவரது மனைவியும் ஷாங்காய் சிறையில் இரண்டு ஆண்டுகள் கழித்தார்கள்.உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் ஜூன் 2015 இல் விடுவிக்கப்பட்டார். அதே மாதத்தில் அவரது மனைவியும் விடுவிக்கப்பட்டார்.

சீனாவில் சுமார் 10,000 வெளிநாட்டவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலர் தவறாகக் கைது செய்யப்பட்டதாகவும் முன்னாள் தொழிலதிபர் தனது ஆய்வுகளின் மூலம் மதிப்பீடு செய்துள்ளார்.அவுஸ்திரேலியர்கள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு சரியான சட்ட நடவடிக்கைகளை வழங்கவில்லை என்றும் ஹம்ப்ரே கூறினார்.

“ஒரு அவுஸ்திரேலிய கைதி கூட நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்தவில்லை. சிலருக்கு உடல்நிலை மோசமாக உள்ளது. சிலர் 50 வயதைக் கடந்தவர்கள்.அவர்கள் வேகமாக முதுமை அடைகின்றனர்,” என்று அவர் செனட் குழுவிடம் கூறினார்.

“சில வெளிநாட்டு கைதிகள் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சிறைகளில் உள்ளனர். அவர்களில் யாரும் அங்கு இருக்க வேண்டியவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

“அவர்கள் என்ன குற்றம் சாட்டுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒரு பாரபட்சமற்ற நீதிபதியுடன் சுதந்திரமான நீதிமன்றத்தில் அவர்கள் ஒருபோதும் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்தாதபோது அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது கூட முக்கியமில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹம்ப்ரே தனது அனுபவத்தை விவரிக்கையில், சீன கம்யூனிஸ ஆட்சியின் கீழ் நீதித்துறை கட்டமைப்பு ஒடுக்குமுறையாகவே முன்னெடுக்கப்படுகிறது.

“எந்த நீதிபதியும் சுதந்திரமானவர் அல்லது பாரபட்சமற்றவர். அவர் கம்யூஸ்ட் கட்சியின் தூதுவர்,” என்றார்.”இந்தக் கட்டமைப்பு இணைக்கப்பட்ட நபர்களால் அவர்கள் மீது வெறுப்பு கொண்ட மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதே நேரத்தில், சிறைகளில் உள்ள அவுஸ்திரேலியர்கள் உட்பட கைதிகளின் மோசமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி ஹம்ப்ரே பகிர்ந்து கொண்டார். அவர்கள் சிறிய அறையில் மேலும் பலருடன் தரையில் தூங்க வேண்டியிருந்தது.அசுத்தமான உணவை உண்ண வேண்டியிருந்தது.

சிறையின் வணிக லாபத்திற்காக கைதிகள் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT