தடை செய்யப்பட்ட பஷ்தூன் தஹாஃபுஸ் இயக்கம் (PTM) நடத்தும் நிகழ்வுகள் அல்லது பேரணிகளில் பொது ஊழியர்கள் பங்கேற்பதைத் கைபர் பக்துன்க்வா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அனைத்து மாகாண திணைக்களங்களுக்கும் இது தொடர்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதோடு சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு , உடல், நிதி அல்லது இரகசிய பங்கேற்பு உட்பட தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் எந்தவொரு ஈடுபாட்டிற்கும் எதிராக அரசு ஊழியர்களை எச்சரித்தது.
அதே நேரத்தில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 11EE இன் கீழ் பஷ்தூன் தஹாஃபுஸ் இயக்க தலைவர் மன்சூர் பஷ்டீன் மற்றும் 44 பேரை நான்காவது அட்டவணையில் மத்திய அரசு சேர்த்துள்ளது. குழு மீதான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குகிறது என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பலுகிஸ்தான் அரசாங்கம் இப்பகுதியில் பஷ்டீன் நுழைவதற்கு 90 நாள் தடை விதித்தது. பலுகிஸ்தான் உள்துறை அமைச்சின் அறிவிப்பில், இந்த தடையானது இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி வரை பஷ்தீனின் பலூகிஸ்தானுக்கான பிரவேசத்தைக் கட்டுப்படுத்தும் என்று கூறியது. இது “பொது அமைதி மற்றும் பாதுகாப்பின் சிறந்த நலனுக்காக” செயல்படுத்தப்பட்டது என்று அது வலியுறுத்தியது.
பஷ்தூன் தஹாஃபுஸ் இயக்க மீதான இந்த அண்மைய தடைகள், இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருக்கும் பதற்றங்களை அதிகரித்து, பஷ்டூன் உரிமைகள் மற்றும் பாகிஸ்தானில் அரசு அதிகாரம் தொடர்பான ஆழமான பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது.
பஷ்தூன் தஹாஃபுஸ் இயக்கமானது பஷ்டூன் சமூகத்தின் உரிமைகளுக்காக போராடிவருகிறது. பழங்குடியினர் பகுதிகளில் பலவந்தமாக காணாமல் போதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் போன்ற கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இருப்பினும் அது அதன் நடவடிக்கைகளில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது.
அவர்களின் முகாமுக்கு முழுப் பாதுகாப்பை அளிப்பதாக கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் உறுதியளித்த போதிலும், காவல்துறை ஜிர்கா அமைப்பாளர்கள் மீது நள்ளிரவில் சோதனை நடத்தியது.அவர்களது கூடாரங்களுக்கு தீ வைத்துள்ளதோடு தளத்தில் கூடியிருந்த அமைதியான செயல்பாட்டாளர்களைத் தொடர்ந்து தாக்குவது, கைது செய்வது மற்றும் தடுத்து வைப்பது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
பஷ்டூன் தஹாஃபுஸ் இயக்கம் (PTM)வன்முறை, பயங்கரவாதம் மற்றும் இலக்கு கொலைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய ஜிர்கா கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்தது. ஆனால் இதனை பயன்படுத்தி அடக்குமுறை நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
2018 இல் நிறுவப்பட்ட பஷ்தூன் தஹாஃபுஸ் இயக்கம் என்பது பாகிஸ்தானில் உள்ள பஷ்டூன்களின் உரிமைகளுக்காக போராடுவதில் கவனம் செலுத்தும் அடிமட்ட முயற்சியாகும். மன்சூர் பஷ்தீனின் தலைமையில், இந்த அமைப்பு பஷ்டூன்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களான நீதிக்கு புறம்பான கொலைகள், வலுக்கட்டாயமாக காணாமல் போதல்கள் மற்றும் அவர்களின் பிராந்தியங்களில் கண்ணிவெடிகளால் ஏற்படும் ஆபத்துகள் போன்றவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் செயற்படுகிறது. (ANI)