106
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுத் தாக்கல் அண்மையில் நடைபெற்றபின், வழிபாட்டுத் தலங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்திருந்தன. முன்னாள் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் விஜேகுமார் ஏற்பாட்டின் கீழ் வத்தளை ஹேகித்த முருகன் ஆலயத்தில் இந்த நிகழ்வில் கைச்சாத்திட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முருகன் ஆசிவேண்டி நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் சசிகுமார் மற்றும் தலைமை வேட்பாளர் ஹர்ஷ ராஜகருணா, ஏனைய உறுப்பினர்களும் சமய வழிபாட்டில் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.