Sunday, November 24, 2024
Home » தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ஹிருணிகா இராஜினாமா

தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ஹிருணிகா இராஜினாமா

- மன விரக்தியே தனது இராஜினாமாவிற்கு காரணம்

by Prashahini
October 13, 2024 8:24 pm 0 comment

– பொதுத் தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட மன விரக்தியே தனது இராஜினாமாவிற்கு காரணம் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரேமச்சந்திர, எதிர்வரும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT