Sunday, November 24, 2024
Home » 2020 இற்குப் பின் இந்தியாவில் பருவமழை 8% ஆக அதிகரிப்பு

2020 இற்குப் பின் இந்தியாவில் பருவமழை 8% ஆக அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
October 8, 2024 7:19 pm 0 comment

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை இந்த பருவத்தில் நான்கு ஆண்டுகளில் அதிக அளவில் பெய்தது.நீண்ட கால சராசரியில் 108 சதவீதம் 934.8 மி.மீ. என இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பருவமழைக்கு முந்தைய முன்னறிவிப்பில், நாடு முழுவதும் மழைப்பொழிவு வழமையை விட அதிகமாக இருக்கும் என்று கணித்தது.இது நீண்ட கால சராசரியில் 106 சதவீதமாக இருக்கும்.

இந்த பருவத்தில் அதிக பயிர்களை விதைப்பதற்கு விவசாயிகளுக்கு உதவியாக அமைந்தது. மேலும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமான ஒட்டுமொத்த விவசாயத் துறைக்கும் இது நன்மையாக அமைந்தது. சாதாரண பருவமழைக்கு மேல் பெய்யும் மழை விவசாயத் துறையில் மொத்த மதிப்பு கூட்டலை மேம்படுத்தும்.

பாரம்பரியமாக, இந்திய விவசாயம் பருவ மழையை பெரிதும் நம்பியுள்ளது. இருப்பினும், நாட்டில் நீர்ப்பாசன வசதிகள் பரவி வருவதால், பருவ மழையை நம்பியிருக்கும் விவசாயிகளின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த ஆண்டு வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, தென் தீபகற்பம் மற்றும் வடகிழக்கு இந்தியா ஆகிய இடங்களில் மழைப்பொழிவு அந்தந்த நீண்ட கால சராசரியில் 107 சதவீதம், 119 சதவீதம், 114 சதவீதம் மற்றும் 86 சதவீதம் என பதிவானது.

பருவமழை ஜூன் மாதத்தில் குறைவாக பதிவானது. அந்த மாதத்தின் நீண்ட கால சராசரியில் 89 சதவீதத்தை பதிவு செய்தது. ஜூலையில் இருந்து, அது அதிகரிக்கத் தொடங்கியது. ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், நீண்ட கால சராசரியில் முறையே 109 சதவீதம், 115 சதவீதம் மற்றும் 112 சதவீதம் என மழை பெய்துள்ளது என்று வானிலைத் தரவு காட்டுகிறது.

இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முன்னேறியது.

இந்த ஆண்டு கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பு சரியாக இருந்தது.இது 2005 இல் இந்த முன்னறிவிப்பு தொடங்கியதிலிருந்து 2015 ஆம் ஆண்டைத் தவிர இந்த நிகழ்விற்கான தொடர்ச்சியான பத்தொன்பதாவது சரியான முன்னறிவிப்பாகும்.

விவசாயிகள் இதுவரை 1,108.57 லட்சம் ஹெக்டெயார்களில் பயிரிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 1,088.25 லட்சம் ஹெக்டெயார்களில் பயிர்களை பயிரிட்டுள்ளது.இது ஆண்டுக்கு ஆண்டு 1.9 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.

நெல் விவசாயிகள் 2.5 சதவீதம் கூடுதல் நிலப்பரப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதால், அரிசி ஏற்றுமதிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்த அரசாங்கம், சில தடைகளை தளர்த்தியுள்ளது. அரசாங்கம் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது. (ANI)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT