227
அமெரிக்கா, தமது நேச நாடுகளுடன் இணைந்து கனிய வளப் பாதுகாப்பு நிதி வலையமைப்பொன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தகவல் பரிமாற்றம் மற்றும் இணை நிதியுதவியை மேம்படுத்தவும் இக்கூட்டு நிதி வலையமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கனிய வளப் பாதுகாப்பு கூட்டாண்மையின் சமீபத்திய முன்முயற்சியாக இவ்வலையமைப்பு உள்ளது.