திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கத்தில் குவாட் பங்காளிகளாக இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் மூலோபாய ரீதியாக இணைத்துள்ளதாக இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிலிப் கிரீன் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பகுதியிலுள்ள குவாட் நாடுகள் பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தகம் மற்றும் இறையாண்மையை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் குவாட் பங்காளிகள், அவை மூலோபாய ரீதியாக இணைந்துள்ளன . நாங்கள் இந்தோ-பசிபிக் திறந்த மற்றும் சுதந்திரத்தை விரும்புகிறோம். எங்கள் பிராந்தியங்களில் சிறந்த இயக்கவியல் உள்ள போதும் சில விடயங்கள் நம்மைத் தடுக்கின்றன. மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் அரசாங்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர வர்த்தகம் மேற்கொள்ள இறையாண்மை வழங்கப்பட வேண்டும் . ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் பொருந்தக்கூடிய தேர்வுகளை அவர்களால் மேற்கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.
குவாட் நாடுகள் கடல்சார் பாதுகாப்பில் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த பிராந்தியத்தில் தடுப்பூசிகள் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அகற்றுவதில் பணியாற்றுவதாகவும் கிரீன் கூறினார்.
“கடல் அதிகார எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் எமக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எங்கள் கடல்சார் களத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொள்கிறோம்.நாங்கள் கடினமாக உழைத்து, தடுப்பூசிகள் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அகற்ற முயற்சிக்கிறோம். அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பசீன் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது பிரதமர் மோடியைச் சந்தித்து பல முக்கிய விடயங்கள் பற்றி பேசினார்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் உயர் ஸ்தானிகர் எடுதுரைத்தார்.இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டை நோக்கி உழைக்கும் ஒரு சிறந்த மூலோபாய பங்காளியாக இரு நாடுகளுக்கும் பணியாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“அவஸ்திரேலியாவும் இந்தியாவும் இந்தோ-பசிபிக் உறவுகளின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படும் மூலோபாய பங்காளிகள் மற்றும் நண்பர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் வலுவான பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. அவுஸ்திரேலியா இந்தியாவிற்கு தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்கிறது. அவுஸ்திரேலியாவில் பல இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள 4 சதவீத இந்திய மக்கள்தொகை நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றது. மேலும் இது இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுக்கு உதவும்” என்று அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA) மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் இணைய பங்காற்ற வேண்டும்.
“இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையே வர்த்தகச் செயற்பாடுகள் சுமூகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், அவுஸ்திரேலியாவுக்கான இந்திய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும், இந்தியாவின் இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதியும் நான்கில் ஒரு பங்காக உயர்ந்துள்ளன.
மேலும் அவுஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தகத்தை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் இரு நாட்டு வர்த்தகம் மேலும் முன்னேற்றம் அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் வர்த்தகத்திற்கு இன்னும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் மலிவு பொருட்களையும் நுகர்வு செய்ய முடியும் என்று கருதுகிறோம். இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம் ” என்று அவுஸ்திரேலய உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.(ANI)