சீனத் தடுப்புக் காவலில் 1,000 நாட்கள் கழித்த ஒரு கனேடிய குடிமகன் தான் அனுபவித்த மறக்க முடியாத கஷ்டங்களை விபரிக்கையில் அது உளவியல் சித்திரவதைக்குக் குறைவானது அல்ல என்றார். உளவு பார்த்ததாக சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர் 2021 இல் வீடு திரும்பியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் மைக்கேல் கோவ்ரிக், 1,000 நாட்களுக்கும் மேலாக சீனாவால் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு கனேடிய குடிமக்களில் ஒருவரான அவர், ஆறு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், உளவியல் ரீதியான சித்திரவதைகளை அனுபவித்ததாகவும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சிஎன்என் அறிக்கை கூறுகிறது.
“இது உளவியல் ரீதியாக, முற்றிலும், நான் அனுபவித்த மிகவும் கடினமான, வேதனையான விடயம்” என்று கோவ்ரிக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீன சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கனேடிய செய்தி நிறுவனமான சிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
அவர் ஆறு மாதங்களுக்கு புளோரசன்ட் விளக்குகளின் கீழ் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இது ஐநா தரநிலைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் கோவ்ரிக் கூறினார். அவர் தினமும் 6 முதல் 9 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், ஒரு மணி நேரம் ஒரு நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டார்.மேலும் ஒரு நாளைக்கு மூன்று கிண்ணங்கள் சோறு மாத்திரம் வழங்கப்பட்டது.
“அவர்கள் கொடுமைப்படுத்தவும், துன்புறுத்தவும், பயமுறுத்தவும், அவர்களின் யதார்த்தத்தின் தவறான பதிப்பை ஏற்கும்படி வற்புறுத்தவும் முயற்சித்தார்கள்” என்று கோவ்ரிக் CNN செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
கோவ்ரிக் தடுப்புக் காவலில் இருந்தபோது,அவருக்கு எதிரான ஆதாரங்களையோ அல்லது மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விரிவான தகவல்களையோ பகிரங்கமாக வெளியிடவில்லை.
சர்வதேச நெருக்கடி தொடர்பான குழுவின் சிரேஷ்ட ஆலோசகரான கோவ்ரிக் முன்னாள் இராஜதந்திரியாவார். அவர் 2018 டிசம்பர் 10 ஆம் திகதி பீஜிங்கில் இரவு உணவிற்குப் பிறகு தனது துணையுடன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
CNN அறிக்கையின்படி, “நாங்கள் எனது அடுக்குமாடி கட்டிடத்திற்கு முன்னால் உள்ள பிளாசாவிற்கு முன்னால் ஒரு சுழல் படிக்கட்டு வழியாக வந்தோம். எங்களைச் சுற்றி கேமராக்களுடன் வந்த கும்பலொன்று “அவர் தான்” என்று சீன மொழியில் கத்தினார்கள்.
அதில் அவர் கைது செய்யப்பட்ட போது கைவிலங்குகள் கட்டப்பட்டு, கண்களை கட்டி வாகனத்திற்குள் தூக்கி எறியப்பட்டதாகவும், பின்னர் சிறைக் கூண்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத நிலையில் இரண்டு வருடங்களின் பின்னரே இவர் விடுவிக்கப்பட்டார். (ANI)
“நான் மிகக் கடினமான, வேதனையான விடயங்களை அனுபவித்தேன்”
– சீன தடுப்புக்காவலில் இருந்து விடுதலையான கனேடிய நபர் தெரிவிப்பு