பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு-காஷ்மீரில் (PoJK) உள்ள தொசுட், பண்டெல், குவாஜா செரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படாமை மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு-காஷ்மீரின் நீலும் பள்ளத்தாக்கில் உள்ள தொசுட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், அதிகாரிகளுக்கு பல முறைப்பாடுகளை அளித்த போதிலும், குறிப்பிடும்படியான மாற்றங்கள் எதையும் காணவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொசுட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரே ஒரு மருந்தகம் தான் இங்கு உள்ளது. அதுவும் மோசமான நிலையில் இருப்பதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலைமை நிர்வாக புறக்கணிப்பின் விளைவாக உள்ளது” என்று பிரதேசவாசி ஒருவர் கூறினார்.
சிக்கலான நிலைமை குறித்து மருந்தகத்தின் பொறுப்பாளர், கவாஜா ஜாவேத், கவலை தெரிவித்தார்.சுமார் 40 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சுமார் 40 ஆண்டுகள் கடந்துவிட்டன, மேலும் இந்த அடிப்படை சுகாதாரப் பிரிவில் (BHU) எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, சுற்றியுள்ள பகுதிகளின் மக்கள் தொகை 10,000 இனையும் தாண்டியுள்ளது. நாங்கள் தற்போது அதிக சுமையுடன் உள்ளோம், மேலும் எங்கள் பிரிவுக்கு அதிக நிதி மற்றும் பணியாளர்களை வழங்க உள்ளூர் நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம். ”என்று அவர் கூறினார்.
மற்றொரு குடியிருப்பாளர் அப்பகுதியில் உள்ள மருத்துவ நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.மேலும் இப்பகுதியில் மருத்துவ பிரிவு இல்லை, மேலும் மருத்துவ சேவைகளுக்காக காத்திருக்க அவர்கள் அதிக தூரம் செல்ல வேண்டும் என்றார்.
“எங்களிடம் உள்ள கிளினிகிற்கு அடிப்படை சுகாதாரப் பிரிவு என்ற நாமத்தைக் கூட நிர்வாகத்தினர் கொடுக்கவில்லை. அதனைப் பெற நாங்கள் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.இது மேலும் சிக்கல்களை உருவாக்கும். சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த வசதிகளை செய்து தருவது அவர்களின் பொறுப்பு,” என்றார்.
“49 வருடங்கள் ஆகிறது. இன்னும் எங்களிடம் மருத்துவப் பிரிவு இல்லை. இது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அடுத்த சுகாதார பிரிவு இங்கிருந்து 8-10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதோடு அதற்கு அடுத்த பிரிவு இன்னும் அதிக தூரத்தில் உள்ளது, ”என்று அவர் மேலும் கூறினார்.
அநேகமான சமூக-பொருளாதார சவால்களுடன் போராடி வரும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீரில் போதுமான வளர்ச்சி மற்றும் வசதிகள் இல்லாதது குறித்து கவுன்சிலர் உட்பட உள்ளூர்வாசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர்ச்சியான பின்தங்கிய நிலைமை அடுத்தடுத்த அரசாங்கங்களின் அலட்சியம் ஆகியவை அதன் குடியிருப்பாளர்களிடையே அந்நியமான உணர்வையும் விரக்தியையும் வளர்த்துள்ளன என்று அவர்கள் கூறினர்.
இப்பகுதியில் மருத்துவ வசதி தவிர, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.
தற்போதைய நிலைமைகளை பாதிக்கும் வரலாற்று சிக்கல்கள், நிர்வாக சிக்கல்கள் மற்றும் சமூக-பொருளாதார சவால்கள் ஆகியவற்றின் கலவையுடன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு காஷ்மீர் போராடுகிறது. இப்பிராந்தியத்தின் சிக்கலான அரசியல் நிலை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் அதன் வளர்ச்சிக்கு இடையூறாகத் தொடர்கின்றன.அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த நிலைமை மேலும் மோசமடையச் செய்கிறது. (ANI)