கம்பளையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர், ஊடகவியலாளர் அம்னா இர்ஷாத் ‘மக்களின் முரசு’ , ‘லங்க புத்ர’, ‘தேச பந்து’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
‘வாழும் போதே வாழ்த்துவோம்’ என்னும் தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்விலேயே அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, தேசிய கலை அரன் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவ்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட சமன் ரத்ன பிரிய மற்றும் இன்திக விஜய் ரத்ன, மாநகர முதல்வர் சுஜீவ மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சுனில் பெரேரா என பலரும் கலந்து கொண்டனர்.