Sunday, November 24, 2024
Home » வீதியில் கண்டெடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை மாணவி

வீதியில் கண்டெடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை மாணவி

மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்

by mahesh
September 25, 2024 11:30 am 0 comment

மஸ்கெலியா சென்.ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா என்பவர் வீதியில் கிடந்த அரைப் பவுண் தங்க தாலி, மற்றும் ரூ.3000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

மஸ்கெலியா- சாமிமலை வீதியிலுள்ள அம்மன் ஆலய பிரதான வீதியில், நேற்று (24) காலை கண்டெடுத்த அரைப் பவுண் தங்க தாலி மற்றும் ரூ.3000 பணம் ஆகியவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு, இது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்துள்ளார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ். புஷ்பகுமாரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட ராணி பிரிவிலுள்ள ரெங்கன் புவனலோஜினி (வயது 46) என்பவரே அந்த பொருட்களின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டார்.

அந்த பொருட்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஸ்கெலியா ராணி பிரிவிலிருந்து கொழும்புக்கு முச்சக்கர வண்டியில் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு சென்றுக் கொண்டிருந்த போது இந்தபொருட்கள் அடங்கிய பொதி தவறவிடப்பட்டுள்ளது. அவற்றை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவியை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பொருட்களுக்கான உரிமையாளரும் மாணவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT