பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்றையதினம் (24) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அவர், நேற்று சுகாதார அமைச்சில் தனது கடமைகைளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு விடயமாக நாம் காண்கிறோம். அரசாங்கம் எனும் வகையில் அதற்காக செய்ய வேண்டிய விடயங்களை உச்ச அர்ப்பணிப்புடன் நாம் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
அரசாங்கம் எனும் வகையில் நோயாளர்கள் மக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் நியமனம்