புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று(24) பதவியேற்கவுள்ளது.
தேசிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சரவை பதவியேற்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் ஹரினி அமரசூரிய, விஜித ஹேரத், லக்ஸ்மன் நிபுண ஆரச்சி உள்ளிட்ட மொத்தமாக 3 எம்.பிக்கள் உள்ளதோடு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 4 பேரிடையே அமைச்சுகள் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.