சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியின் போது அவரது வலது தொடை தசையில் ஏற்பட்ட இறுக்க நிலைய காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய விஷ்வ பெனாண்டோவுக்குப் பதிலாக 27 வயதான வலது கை சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள நியூஸிலாந்து அணியுடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (26) காலியில் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.