Sunday, November 24, 2024
Home » ஜனாதிபதி செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதி செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்

by Rizwan Segu Mohideen
September 23, 2024 1:54 pm 0 comment

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க (PhD) நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இன்று (23) ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பொருளாதார அபிவிருத்திக் கற்கை தொடர்பான கலாநிதி (PhD) பட்டம் பெற்றுள்ளார்.

இலங்கை இறைவரி திணைக்களத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் களனி பல்கலைக்கழகத்தின் அறிஞராவார்.

ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் மாத்தறை ராகுல கல்லூரியின் பழைய மாணவராவார்.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கத்துறையில் ஊழல் ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அந்த ஆய்வுகள், சர்வதேச வெளியீடுகள் பலவற்றில் பிரசுரமாகயுள்ளன.

அவர் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization) சுங்க நவீனமயமாக்கல் தொடர்பான பட்டய ஆலோசகர் என்பதோடு பணிவிணக்க மேம்பாடு தொடர்பான நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக சுங்க அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல நாடுகளுக்கு விஜயம் செய்து சுங்க இணக்க மேம்பாடு தொடர்பான பல நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

1997 ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக சேவையில் இணைந்த அவர் இலங்கை சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்கவின் பதவி பாராளுமன்றத்தில் வெற்றிடம்

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பு

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT