– நாடு முழுவதும் 13,421 வாக்களிப்பு நிலையங்கள்
– 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி
– தேர்தல் கடமைகளில் 150,000 அரச அதிகாரிகள்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது.
காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளதுடன், 171.4 மில்லியன் (17,140,354) இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகின்றது.
இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த 39 பேரில் ஐதுரூஸ் மொஹம்மத் இல்யாஸ் மரணித்ததை தொடர்ந்து 38 பேர் போட்டியில் உள்ளனர்.
தேர்தல் சட்டத்தின் 22(1) (ஆ) உப பிரிவுக்கமைய வாக்குச்சீட்டு மற்றும் வாக்கெடுப்புக்குரிய ஏனைய அனைத்து ஆவணங்களிலும் மரணமடைந்த வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டதாக கருதப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 22 வேட்பாளர்களும் வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை உரிய இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் நேற்று (20) காலை முதல் இரவு வரை உரிய பாதுகாப்புடன், விசேட போக்குவரத்து வழங்கப்பட்டது முன்னெடுக்கப்பட்டது.
இன்று மு. ப. 7.00 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு பி.ப. 4.00 மணிக்கு நிறைவடைவதை தொடர்ந்து, முதலாவது தேர்தல் பெறுபேறாக தபால் மூல வாக்களிப்பு பெறுபேறு வெளியிடப்படும்.
அந்த வகையில் முதலாவது தேர்தல் முடிவு முதல் இறுதியான மொத்த தேர்தல் முடிவு வரையான உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை தினகரன் Facebook பக்கம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Seq.No | Symbol | Name |
---|---|---|
1 | AKMEEMANA DAYARATHANA THERO அக்மீமன தயாரத்ன தேரர் |
|
2 | ABUBAKAR MOHAMED INFAS அபூபக்கர் மொஹமட் இன்ஃபாஸ் |
|
3 | SIRIPALA AMARASINGHE சிறிபால அமரசிங்க |
|
5 | K.K. PIYADASA கே.கே. பியதாச |
|
6 | SARATH KEERTHIRATHNA சரத் கீர்த்திரத்ன |
|
7 | K.A. KULARATNA கே. குலரத்ன |
|
8 | K.R. KRISHAN கே.ஆர்.கிருஷ்ணன் |
|
9 | ANURA SIDNEY JAYARATHNA அநுர சிட்னி ஜயவர்தன |
|
10 | DILITH JAYAWEERA திலித் ஜயவீர |
|
11 | SIRITUNGA JAYASURIYA சிறிதுங்க ஜயசூரிய |
|
12 | MYLVAGANAM THILAKARAJAH மயில்வாகனம் திலகராஜா |
|
13 | A.P. SURANJEEWA ANOJ DE SILVA சுரஞ்சீவ அனோஜ் டி சில்வா |
|
14 | LALITH DE SILVA லலித் டி சில்வா |
|
15 | AJANTHA DE ZOYSA அஜந்த டி சொய்சா |
|
16 | ANURA KUMARA DISSANAYAKE அநுர குமார திஸாநாயக்க |
|
17 | MAHINDA DEWAGE மஹிந்த தேவகே |
|
18 | ARIYANETHIRAN PAKKIYASELVAM அரியநேத்திரன் பாக்கியசெல்வம் |
|
19 | VICTOR PERERA விக்டர் பெரேரா |
|
20 | ANURUDDHA POLGAMPALA அநுருத்த பொல்கம்பல |
|
21 | SAJITH PREMADASA சஜித் பிரேமதாஸ |
|
22 | SARATH FONSEKA சரத் பொன்சேகா |
|
23 | DISSANAYAKA MUDIYANSELAGE BANDARANAYAKE டி. முதியன்சேலாகே பண்டாரநாயக்க |
|
24 | SARATH BANDARANAYAKE சரத் பண்டாரநாயக்க |
|
25 | BATHTHARAMULLE SEELARATHANA THERO பத்தரமுல்லே சீலரதன தேரோ |
|
26 | NUWAN BOPEGE நுவன் போபகே |
|
27 | SARATH MANAMENDRA சரத் மனமேந்திர |
|
28 | PEMASIRI MANAGE பேமசிறி மனகே |
|
29 | ANURUDDHA ROSHAN RANASINGHE ரொசான் ரணசிங்க |
|
30 | JANAKA RATNAYAKE ஜனக ரத்நாயக்க |
|
31 | NAMAL RAJAPAKSHA நாமல் ராஜபக்ஸ |
|
32 | NAMAL RAJAPAKSA நாமல் ராஜபக்ச |
|
33 | WIJEYADASA RAJAPAKSHE விஜேதாச ராஜபக்ச |
|
34 | A.S.P. LIYANAGE ஏ.எஸ்.பி. லியனகே |
|
35 | KEERTHIE WICKRAMARATNE கீர்த்தி விக்ரமரத்ன |
|
36 | PRIYANTHA WICKRAMASINGHE பிரியந்த விக்ரமசிங்க |
|
37 | RANIL WICKREMESINGHE ரணில் விக்ரமசிங்க |
|
38 | PANI WIJESIRIWARDENA பானி விஜேசிறிவர்தன |
|
39 | OSHALA HERATH ஓஷல ஹேரத் |