222
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதவியில் கீதா குமாரசிங்க வகித்திருந்ததோடு, அண்மையில் அவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கத்தை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (10) கீதா குமாரசிங்க உள்ளிட்ட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 5 இராஜாங்க அமைச்சர்கள் நீக்கம்