2024 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது
அத்துடன், புலமைப்பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், வெளியிடுவதற்கும் தடைவிதித்துள்ளது.
பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
மேலும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.