எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்பன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ளன.
முச்சக்கரவண்டி சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் நேற்று (04) காலை கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட பூமியில் ஒன்றுகூடியதுடன், தங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை அடுத்து அந்த இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
கடந்த 25 வருடங்களாக நான்கு நிறைவேற்று ஜனாதிபதிகளின் கீழ் தீர்க்கப்படாத முச்சக்கரவண்டி தொழிற்துறை ஒழுங்குபடுத்தல் தொடர்பான பிரச்சினைக்கு 24 மணித்தியாலங்களில் தீர்வை வழங்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த முச்சக்கர வண்டி சாரதிகள், கடந்த காலத்தில் தங்களின் தொழில்களை மேற்கொள்ள முடியாமல் பல நாட்களாக எரிபொருள் வரிசையில் தவித்ததாகவும் அந்த நிலையில் இருந்து ஜனாதிபதியே தங்களை மீட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு முகம் கொடுக்க தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2025 ஆம் ஆண்டு முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடனில் தவிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளின் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக சந்தர்ப்பம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”இலங்கைக்கு முச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வதில் ஜே.ஆர். ஜயவர்தன விசேட ஆர்வத்துடன் பணியாற்றினார். இன்று நாம் நினைத்ததை விட இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முச்சக்கர வண்டிகளை வைத்துள்ளனர். எனவே, இந்த முச்சக்கர வண்டித் தொழிற்துறையை சரியான கட்டமைப்பிற்குள் நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.
முச்சக்கரவண்டித் தொழிற்துறை எதிர்கொண்டிருந்த ஒழுங்குமுறைப் பிரச்சினையை நாம் ஏற்கனவே தீர்த்துவிட்டோம். அத்துடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம்.
மேலும், கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி, இரண்டு அரச வங்கிகள் மூலம் நிவாரணம் வழங்குவதற்கும் தனியார் வங்கிகளுடனும் கலந்துரையாடவும் எதிர்பார்க்கிறோம்.
முச்சக்கர வண்டித் தொழிலுக்கு இன்னும் முறையான அமைப்புப்பொன்று அவசியம். ஒவ்வொரு மாகாணத்திலும் இச்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை நியமித்து இங்கு எதிர்கால முன்னெற்றத்திற்கு புதிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில், எரிபொருள் மட்டுமன்றி மின்சார முச்சக்கரவண்டிகளும் தேவைப்படுகிறன. இந்தச் செயற்பாடுகள் அனைத்திலும் கவனம் செலுத்தி எமது எதிர்கால முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர:
”முச்சக்கர வண்டி சேவையின் தரம் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கத்தின் தலையீடு இன்றியமையாதது. அந்த குறைபாடுகளை நீக்க அரசாங்கத்தின் மேற்பார்வை முக்கியமானது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்து வருகிறோம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பிரச்சினையை முன்வைத்து 24 மணித்தியாலங்களுக்குள் அதனை நிறைவேற்றிவிட்டார்.
மேலும் அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமும் எங்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ளார். எனவே, முச்சக்கரவண்டி சேவையை NVQ4 தரத்திற்கு கொண்டு வருவதுடன், NVQ சான்றிதழ் வழங்குதல், ஓய்வூதிய சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, கொவிட் தொற்றுநோய் நிலைமையினால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குதல் என்பன தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்துள்ளார்.
இந்த விடயங்களில் ஜனாதிபதியின் தலையீடு இலட்சக்கணக்கான முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்குச் செய்யும் சேவை என்றே கூற வேண்டும். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு நாம் பங்களிப்போம்” என்றார்.
தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம் தலைவர் ஜெஸ்மின் லங்கா:
”46 வருடங்களாக இந்நாட்டில் முச்சக்கரவண்டித் தொழில் முறைசாரா முறையில் இயங்கி வந்தது. நமது தலைவர்கள் 25 ஆண்டுகளாக அதன் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் போராடினார்கள்.” என்றார்.
அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர,
”நான்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க ஒன்றுகூடினோம். முச்சக்கர வண்டி போக்குவரத்துச் செயற்பாடுகளின் எதிர்காலப் பயணம், தரம் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தின் தலையீடு அவசியமாக காணப்பட்டது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக அதற்கான கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒரு முறை மட்டுமே பிரச்சினையை கூறினோம். அவர் 24 ணித்தியாலங்களுக்குள் தீர்வை வழங்கினார்.
மேலும், அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எங்களது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளார். முச்சக்கரவண்டி சேவையை NVQ4 தரத்திற்கு கொண்டு வருவதுடன், NVQ சான்றிதழ் வழங்குதல், ஓய்வூதிய சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, கொவிட் தொற்றுநோய் காலத்தில் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சமூகத்திற்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
இது இலட்சக்கணக்கான முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்குச் செய்யும் சேவையாகும். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்வோம்.
தேசிய Taxi app முச்சகரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மின் லங்கா ;
”46 வருடங்களுக்கு மேலாக நாட்டில் முச்சக்கரவண்டித் தொழில் முறைசாரா விதத்தில் இயங்கி வருகிறது. 25 ஆண்டுகளாக அதனை ஒழுங்குபடுத்த போராடினோம். இந்த நாட்டின் 04 நிறைவேற்று ஜனாதிபதிகளால் தீர்வு தர முடியாமல் போன பிரச்சினையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைத்தார்.
இப்போது Taxi App மூலம் வியாபாரம் செய்கிறோம். அதனால் இந்த தொழில் முறைசாராமல் காணப்பட்டது. இதனால், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக அமைந்திருக்கிறது.
கடந்த காலத்தில் வாரக்கணக்கில் எரிபொருள் வரிசைகளில் இருந்தோம். இன்று எமக்கு போதுமான எரிபொருள் கிடைக்கிறது. அதனால், எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிரச்சினைகளை ஜனாதிபதியால் மட்டுமே தீர்க்க முடியும். இல்லையெனில் மீண்டும் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டும்.
ஜே.வி.பி. மேடைகளிலும் இதுபோன்றதொரு Taxi App முறை அறிகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி முச்சக்கர வண்டி சேவைக்கு பாதகம் விளைவிக்கும் செயற்பாடுகளையே அவர்கள் முன்னெடுக்க பார்க்கின்றனர்.
ஐக்கிய மக்கள் போக்குவரத்துச் சேவை சங்கத்தின் செயலாளர் ரகுமான் பள்ளேய்,
”ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம். ஏனெனில், அவர் முச்சக்கர வண்டித் தொழிலின் பாதுகாப்பிற்காக வர்த்தமானி வௌியிட்டார். அவரின் வெற்றிக்காக அர்பணிப்புடன் செயற்படுவோம்.
இலங்கையில் முச்சக்கரவண்டித் தொழில் தொடர்பாக சட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைக்கு வரவில்லை. மேல் மாகாணத்தில் 2002 ஆம் ஆண்டு வர்த்தமானியில் விதிமுறைகள் வெளியிடப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அடுத்த வருடம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம். முச்சக்கர வண்டி சமூகம் என்ற வகையில் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.