கல்முனை கிரீன் பீல்ட் றோயல் கல்லூரியின் தரம்-03 மாணவர்கள் நேற்று (03) கல்முனை மாநகர பொது நூலகத்திற்கு விஜயம் செய்து, நூலக செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் மாணவர்கள் வரவேற்கப்பட்டு, நூலகத்தின் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நூலகத்தில் சிறுவர்களுக்கென பிரத்தியேகமாக சிறுவர் பகுதி அமைக்கப்பட்டு, சிறுவர்களுக்கான அறிவுசார் சஞ்சிகைகள், கதைப் புத்தகங்கள், கவிதை மற்றும் பாடல் நூல்கள், கல்விசார் நூல்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் இங்கு வந்து இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் நூலகர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். வகுப்பாசிரியர் ரி.எம். பிர்னாஸின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
(சாய்ந்தமருது விசேட நிருபர்)