தமிழ் சினிமாவில் 90 ஸ் காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார், எனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும் என்று பேசி உள்ளது தமிழ் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சங்கீதா. இதையடுத்து 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதலே நிம்மதி படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சங்கீதா. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்த சங்கீதா. உயிர், தனம், நேபாளி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். .திருப்புமுனையை ஏற்படுத்திய படம்: நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, மனோபாலா, சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சங்கீதா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது.
காதல் திருமணம்: அதைத்தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து வந்த சங்கீதா, பாடகர் கிரிஷை 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது, குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில், ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்திருந்தார். தமிழ் பிடிக்காது: இந்நிலையில், நடிகை சங்கீதா அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும். தற்போது தெலுங்கு படத்தில் தான் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதைப்பார்த்து, எவ்வளவு பேரு கோபப்பட்டாலும் அது பத்தி எனக்கு கவலை இல்லை. தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதை, தமிழ் சினிமாவில் கொடுக்க மாட்டார்கள்.
அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இந்த மனப்பான்மை வருவதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. சங்கீதா மனதில் இருப்பதை ஓபனாக பேசி இருந்தாலும், இது தமிழ் ரசிகர்களின் மனதை புண்படுத்திவிட்டது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.