308
தொழில் இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலையகத்தில் பல அபிவிருத்தி வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் பண்டாரவளை கிரேக் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் 90 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.