Sunday, November 24, 2024
Home » சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பஸ் மரத்தில் மோதி விபத்து

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பஸ் மரத்தில் மோதி விபத்து

by Prashahini
August 24, 2024 12:42 pm 0 comment

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் இங்கினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை பஸ் நிலையத்திலிருந்து நேற்று (23) இரவு 7.00 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட இ.போ.ச.பஸ் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பஸ் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ள நிலையில் , பயணிகள் உடனடியாக பஸ் சாரதியை இங்கினியாகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த பஸ்ஸில் 40 பேர் பயணித்த போதிலும் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT