– உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உள்ளூராட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும், தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று (22) தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம் , விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணைக்குழுவை பணித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, காமினி அமரசேகர, முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.