122
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அபிவிருத்தித் திட்ட அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (21) ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாக இருவரும் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.