Sunday, November 24, 2024
Home » விசர் நாய்க்கடி அதிகரிப்பு; இதுவரையில் 11 பேர் மரணம்

விசர் நாய்க்கடி அதிகரிப்பு; இதுவரையில் 11 பேர் மரணம்

விழிப்புணர்வு இல்லாமையே காரணம்

by gayan
August 17, 2024 10:30 am 0 comment
தொற்றுநோயியல் நிறுவனம் தெரிவிப்பு

நாட்டில் விசர் நாய்க்கடியால் இந்த ஆண்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. விசர் நாய்க்கடி நோயான

நீர்வெறுப்பு நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே, இவ்வாறான மரணங்கள் இடம்பெறுவதாக அந்நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இதற்கு முன்னரான ஆண்டுகளை விட கடந்த ஆண்டு விசர் நாய்க்கடி நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் ஆனால் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முறையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாமையே இந்த மரணங்களுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படும் 300 அரசாங்க வைத்தியசாலைகள் நீர்வெறுப்பு நோய் தடுப்பு மருந்தை வழங்குகின்றன. கடுமையான விசர் நாய்க்கடி ஏற்பட்டால் அதற்கான தடுப்பூசியும் சுமார் 100 மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இலவசமாகவே இதற்கான மருந்துகள் வழங்கப்படுவதால் விலங்குக் கடிக்கு உள்ளானவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT