Sunday, November 24, 2024
Home » வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை மனு நிராகரிப்பு

வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை மனு நிராகரிப்பு

- தொடர்ந்து விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு

by Prashahini
August 5, 2024 4:28 pm 0 comment

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (5) உத்தரவிட்டுள்ளார்.

இன்று நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்ச்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையினுள் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள்பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள், வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த வைத்தியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணை மனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT