Sunday, November 24, 2024
Home » கேரளாவில் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்; பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

கேரளாவில் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்; பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

by Prashahini
July 30, 2024 1:09 pm 0 comment

இந்தியா, கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று (30) அதிகாலை 2.00 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் 4.30 மணிக்கு மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த மண்சரிவினால் வெள்ளேரிமலை, மேப்பாடி, வைத்திரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாலமொன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.

திடீரென ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மண்சரிவில் சிக்குண்டுள்ள மக்களை ஹெலிகொப்டர் மூலமாக மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், சிக்குண்டவர்களின் நிலைகுறித்து எந்தத் தகவலும் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT