Sunday, November 24, 2024
Home » நுவன் துஷாரவிற்கும் காயம்; தொடரிலிருந்து விலகல்

நுவன் துஷாரவிற்கும் காயம்; தொடரிலிருந்து விலகல்

- நேற்றிரவு பயிற்சியில் விரலுக்கு பாதிப்பு

by Rizwan Segu Mohideen
July 25, 2024 1:28 pm 0 comment

– பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு

இலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான ரி20 போட்டித் தொடருக்காக பெயரிடப்பட்டிருந்த நுவன் துஷார விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிலிருந்து விலகியுள்ளார்.

நேற்றிரவு (24) களத்தடுப்பு பயிற்சியின் போது இடது விரலில் இவ்வாறு காயம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய மேற்கொண்ட மருத்துவ சோதனையில், குறித்த விரலில் என்பு முறிவு ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நுவன் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள துஷ்மந்த சமீரவிற்கு பதிலாக அசித பெனான்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர், எதிர்வரும் சனிக்கிழமை (27) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடரின் T20 குழாம் அறிவிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT