கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த 19 வயதுடைய இளைஞன், காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவசர முடிவொன்றை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
நேற்றையதினம் (24) கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள கடைத் தொகுதியில் இச்சம்பபவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடியைச் சேர்ந்த இந்த இளைஞன், வேலை செய்து கொண்டிருந்த போது, சமய கடமையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்து, குறித்த கடை அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்று தனது காதலிக்கு வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, தன்னை காயப்படுத்தியுள்ளதோடு, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.