பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உள்ளுராட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் அண்மையில் முசாப்பராபாத் நகரில் போராட்ட முகாம்களை அமைத்து, பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பிரதமர் என்று அழைக்கப்படும் சவுத்ரி அன்வருல் ஹக்கிற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.தங்களுக்கு வாக்குறுதி அளித்த அபிவிருத்தி நிதி மற்றும் அதிகாரங்கள் நிறைவேற்றப்படாமை குறித்து அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை பிரதிபலிக்கும் வகையில், பிரதேசம் முழுவதும் உள்ள பெண் உறுப்பினர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
2022ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, கடந்த 20 மாதங்களுக்கு முன்பே உள்ளுராட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டும் அது நிறைவேறவில்லை என அவர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்காதது மற்றும் வாக்குறுதிகளை மீறுவது குறித்து அவர்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் போன்ற உள்ளூர்ப் பிரச்சினைகள், உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பொறுப்புகள் அல்ல என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
“உள்ளுராட்சி தேர்தல் நடத்தி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதி வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும். இது அமைச்சர்களின் வேலையல்ல? உள்ளுராட்சி சபைகளின் கீழுள்ள குழாய்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீர்செய்வது எம்.பிகள் கிடையாது? ” என போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தங்களின் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற அதிகாரம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.வாக்குறுதியளிக்கப்பட்ட ஆதரவை தாமதப்படுத்தியதற்காக அரசாங்கத்தை அவர்கள் விமர்சித்தனர். சௌத்ரி அன்வருல் ஹக் தலைமையிலான நிர்வாகம் பிராந்தியத்தில் உள்ளுராட்சி அமைப்புகளை செயல்பட வைப்பதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
“ஜம்மு காஷ்மீரில் 32 ஆண்டுகளில் முதல் முறையாக நவம்பர் 2022 இல் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.ஆனால் சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு, எங்களுக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை. கடந்த 20 மாதங்களாக மாவட்ட உறுப்பினர்கள், மாநகர சபைகள் மற்றும் கமிட்டிகளின் தலைவர்கள் 8-10 மாதங்களாக வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர் ” என மற்றொரு போராட்டக்காரர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி அமைப்புகளை நிர்வகிக்க ஒத்துழைக்காதது குறித்து அரசாங்கத்திற்குக் கண்டனம் தெரிவித்த போராட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கைகள் தனிப்பட்ட நலனுக்காக மட்டுமல்ல, பொதுமக்களின் நலனுக்காகவும் இருப்பதாக தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் தங்கள் சமூகங்களின் தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்ய தேவையான வாய்ப்புகளை தேடுவதாக கூறினர். அவர்கள் கோரும் வளங்கள், தங்கள் சமூகங்களின் தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு அவசியம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் நலன் மற்றும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய சிறந்த நிர்வாகத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள், ஆனால் அரசாங்கத்தின் அக்கறையற்ற அணுகுமுறை நிலைமையை மோசமாக்கியுள்ளது.