உலக கைவினை நகரத்தின் அந்தஸ்தைப் பெறும் நான்காவது இந்திய நகரமாக ஸ்ரீநகர் ஆனவுடன், காஷ்மீரில் உள்ள கைவினைஞர்கள் பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களை தங்கள் படைப்புகளில் பயன்படுத்துவதை உணர்வுபூர்வமாகத் தவிர்ப்பதில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
இச்சூழலில் “ரைசிங் தி பார்” என்ற மூன்று நாள் கைவினைக் கண்காட்சியில், இளம் கைவினைஞர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பலவீனமான சூழலியலை பிளாஸ்டிக்கற்றதாக வைத்திருப்பதற்கும், கைவினைப் பொருட்களின் மதிப்பை உயர்த்துவதற்கும் தங்கள் பங்களிப்பைக் காட்டுவதற்காக, மக்கும் மக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியில் விளக்கு நிழல்கள், வால்நெட் மற்றும் தேவதரு மரப் பொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டன. காஷ்மீரின் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து காஷ்மீர் ஜெனரல் இசட் அமைப்பு இதை ஏற்பாடு செய்தது.
உலக கைவினைக் கவுன்சிலால் ஸ்ரீநகருக்கு புதிய அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் வந்த இந்த நிகழ்ச்சி காஷ்மீரின் கைவினைகளுக்கும் அதன் கைவினைஞர்களின் திறமைக்கும் நற்பெயரை சேர்க்கிறது.
“எங்கள் குறிக்கோள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஒரு காலத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்த பிளாஸ்டிக் பொருள்கள் உதவாது”, என காஷ்மீர்.கொம் மற்றும் காஷ்மீர் ஜென் இஸட் ட் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தாரிக் அஹமட் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்கள் “காஷ்மீர் பள்ளத்தாக்கின் பலவீனமான சூழலை அழித்துவிடும்” என்றும் அவர் கூறினார். “எங்கள் எதிர்கால சந்ததியினருக்காக” சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை நடுவதுதான் சிறந்த வழி என்று தெரிவித்துள்ள அவர் “தாவரங்களின் வளர்ச்சி ஒரு நீண்ட செயல்முறை; யாராவது அதை தொடங்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றுள்ள குழந்தைகள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள், சுற்றுச்சூழல் நட்பு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தேவைப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த பகுதிகளுடன் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த எமது அமைப்பு முயற்சிக்கிறது. அழகிய மரச்சாமான்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் வால்நட் மரத்திலிருந்து சென்சார்களைப் பயன்படுத்துகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் தயாரிப்புகளில் புளூடூத் ஸ்பீக்கர்கள், ஷோ பீஸ்கள், கடிகாரங்களுக்கான வயர்லெஸ் சார்ஜர்கள் ஆகியவை அடங்கும்” என்று அவர் மேலும் கூறுகிறார். கைபேசிகளை மலசல கூடங்களுக்கு எடுத்துச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதால், ஒருவர் கழிவறையில் இருக்கும்போது மொபைல் போனை வைத்திருப்பதற்கான உபகரணங்களையும் இவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
56 வயதான தாரிக் சர்கார் ஒரு தொலைநோக்கு தொழில்முனைவோர் மற்றும் சந்தைப்படுத்தல் கண்டுபிடிப்பாளர். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட கூகுல் கூட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக வளைகுடாவில் பணிபுரிந்த பிறகு, கைவினைப் பொருட்கள் மூலம் காஷ்மீரி கலாச்சாரம் குறித்த kashmers.com இனை தொடங்கினார். அவரது தயாரிப்புகள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.