T20 மகளிர் ஆசியக் கிண்ணம் ஜூலை 19ஆம் திகதி தம்புள்ளையில் (RDICS) ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், UAE, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் திகதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அந்தவகையில் 2024 மகளிர் T20 ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட தேசிய அணியை கிரிக்கெட் தெரிவுக் குழு தெரிவு செய்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெனாண்டோ இந்த அணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில்
குரூப் A பிரிவில்,
- இந்தியா
- பாகிஸ்தான்
- நேபாளம்
- UAE
குரூப் B பிரிவில்,
- இலங்கை
- பங்களாதேஷ்
- தாய்லாந்து
- மலேசியா
இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி விபரம்:
1. சமரி அத்தபத்து – தலைவர்,
2. விஷ்மி குணரத்ன,
3. ஹர்ஷிதா சமரவிக்ரம,
4. ஹசினி பெரேரா,
5. கவிஷா தில்ஹாரி
, 6. நிலக்ஷி டி சில்வா,
7. அனுஷ்கா சஞ்சீவனி,
8. சுகந்திகா குமாரி
, 9. உதேசிகா பிரபோதனி,
10. அச்சினி குலசூரிய
, 11. இனோஷி பிரியதர்ஷனி, 12. காவ்யா காவிந்தி,
13. சச்சினி நிசன்சலா,
14. சஷினி கிம்ஹானி,
15. அமா காஞ்சனா