Sunday, November 24, 2024
Home » மட்டக்களப்பில் எரிபொருள் பௌசர் மோதி பாரிய விபத்து

மட்டக்களப்பில் எரிபொருள் பௌசர் மோதி பாரிய விபத்து

 -தொலைபேசி சேவைகள் துண்டிப்பு 

by Prashahini
July 14, 2024 12:51 pm 0 comment
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (14) அதிகாலை விபத்துச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் பௌசர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவித்திருக்கிறது.
இவ் விபத்தில் சிக்கிய எரிபொருள் பௌசரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீதியோரமிருந்த தனியார் வளாகத்தின் மதில்ப்பகுதியும் சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன். இலங்கை டெலிக்கொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைக்கப்பட்டு அப்பிரதேச தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு குறூப் நிருபர் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT