கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் திட்டமிட்ட கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான, பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 7 பேரும் இன்றையதினம் (10) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (08) அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்வு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 2 ஆனது (UPDATE)