Sunday, November 24, 2024
Home » ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

- மாத்தறையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார கேள்வி

by Prashahini
July 7, 2024 5:25 pm 0 comment

ஒருமித்த அலை என்ற பெயரில் பரவிய எதிர்மறை அலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைபொறுப்பேற்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை எரித்த கென்யாவாக இலங்கை மாறியிருக்கும்.

ஹக்மன டேனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நேற்று (6) நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ நடமாடும் சேவையின் இரண்டாம் நிகழ்வான ‘ஸ்மார்ட் யூத் கிளப்’ இல் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

“நாட்டைப் பெறுபேற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு குழு ஓடியபோது, மற்றக் குழு பெறுபேற்று நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றது. நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்து, துன்பங்களை அனுபவித்து, அர்ப்பணிப்புகளைச் செய்து, சகித்துக்கொண்டனர். சுரங்கப்பாதையின் மூலையில் இருந்து ஒரு வெளிச்சம் தோன்றும் வரை எங்கள் மக்கள் அர்ப்பணிப்புடன் காத்திருந்தனர்.இவ்வாறானதொரு நிலையில் புலம்பெயர்த்தொழிலாளிகளிடம் நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் என சிலர் வேண்டிக் கொண்டனர்.இன்னும் சிலர் நாட்டை வீழ்த்தச் சொன்னார்கள்.

“கொரியாவும் ஜப்பானும் முன்னோக்கி நகர்ந்தபோது, அவர்களின் முக்கிய காரணியாக தொழிலாளர் சக்தி இருந்தது. இன்று நாம் தொழிலாளர் உற்பத்தித்திறன் அடிப்படையில் உலகின் மிகக் குறைந்த இடத்தில் இருக்கிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் திறன் அது தான். எங்களிடம் திறமைசாலிகள் உள்ளனர்.

நவீன தொழிற்ச்சந்தை உலகத்திற்கு ஏற்றவாறு தொழிலாளியை நாம் தயார் செய்ய விரும்பினால். நாம் அனைத்து தரப்பினரும் கல்வி முறையிலிருந்து நவீன உலகுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தொழிலாளர் சந்தையில் ஒரு திறமைமிக்கவராக முன்னேற உங்களை நீங்கள் பலப்படுத்த வேண்டும். உங்களை பலப்படுத்த மன வலிமையும் நடைமுறை பயிற்சியும் தேவை.

அதற்காக வேண்டித்தான் நாம் இந்த ‘ஸ்மார்ட் யூத்’ திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றோம் இத்திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி பெற விரும்புவோருக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிதியுதவியளிக்க ஜனாதிபதி முன்வந்துள்ளார்

எனவே, எமது தேவைகள் என்ன என்பதுதான் நமக்கு முக்கியம், அந்தத் தேவைக்காக நாம் முன்வர வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் கென்யாவில் பாராளுமன்றம் எரிக்கப்பட்டதைப் போன்றதொரு நிலைமைக்கு நாடு வந்திருக்கும்.

நாட்டின் கடன் சுமை தீர்ந்துவிட்டது என்ற நற்செய்தி வந்தவுடனேயே அது விமர்சிக்கப்படுகிறது. 2048ல் அபிவித்திருத்தியடைந்த நாட்டை உருவாக்குவோம் என்று கூறும்போது அது நடக்காது நாடு இன்னும் கடன் சுமையில் தான் இருக்கின்றது என கூறிக்கொள்கின்றனர்

இவ்வாறன எதிர்மறையான விடயபகல் நம் வாழ்வில் வருகின்றன. சமீபத்திய நாட்களில், எதிர்மறை அலை பரவியது. ஆனால் அந்த அலை உடைந்து விழுந்தது.

‘ஒருமித்த அலை ‘ கூட்டங்கள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன ஆகவே அதிலிருந்து வரும் விஷத்தை குடித்தால் உயிர் போகும்.

எனவே நாம் சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு கட்சிகளின் பல்வேறு வகையான கதைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சின் ஊடகப் பிரிவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT