Sunday, November 24, 2024
Home » நாட்டில் வங்குரோத்து நிலை பிரகடனப்படுத்திய பின் வெளிநாடுகளிடம் கடன் வாங்கவில்லை

நாட்டில் வங்குரோத்து நிலை பிரகடனப்படுத்திய பின் வெளிநாடுகளிடம் கடன் வாங்கவில்லை

by Rizwan Segu Mohideen
July 6, 2024 3:42 pm 0 comment

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் வாங்கவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (05) மாத்தறையில் தெரிவித்தார்.

இலங்கையின் கடனில் கணிசமான பகுதி ரூபாவில் உள்ளது, ஆனால் டொலரில் வரையறுக்கப்படும் போது அதன் பெறுமதி ஏற்ற இறக்கமாக இருக்கும் என அவர் விளக்கினார். இந்த ஏற்ற இறக்கத்தை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பயன்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என ஹக்மன டேனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையில் இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் வாங்கவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர் . எங்கள் கடன்கள் டோலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் ” என அமைச்சர் கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாடு நல்லதா கெட்டதா என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடு சென்று பணம் அனுப்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த குழந்தைகளை நேசிப்பதால் ஆறுதல் மற்றும் சோறு கொடுக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டங்களை மாற்றி நல்லவர்களாக மாற்ற முயற்சிக்கிறோம். எமது பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய போது, ​​ராஜபக்ஷக்கள் திருடுவார்கள் அனுப்ப வேண்டாம் என JVP யினர் கூறினார்கள் .

ஆனால் அப்பெற்றோர்கள் அதை நம்பாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் நாட்டின் மீதுள்ள அன்பினால் 12 பில்லியன் டோலர்களை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனால்தான் இந்நாட்டு மக்கள் மீண்டும் உணவும் பானமும் பெற முடிந்தது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும் எதிர்க்கப்பட்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது, ​​மொனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வந்து இங்கு தன்னை நிலைநிறுத்த முயற்சித்தது, ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கப்படவில்லை. அந்த பல்கலைக்கழகம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது இன்று அது மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது, இது பில்லியன் கணக்கான டோலர்களை வருவாயை ஈட்டுகிறது. JPV செயட்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் இந்த நாடு எவ்வாறு கட்டியெழுப்பப்படும் என அமைச்சர் கூறினார்.

அமைச்சின் ஊடகப் பிரிவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT