முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்காக, நாவலப்பிட்டியில் கம்பளை வீதி, இலக்கம் 54 இல் தனது 49வது கிளையை அண்மையில் திறந்து வைத்துள்ளது.
தனது நாடளாவிய வலையமைப்பிற்கு புதியதொரு சேர்க்கையான நாவலப்பிட்டி கிளையானது, அதன் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் முழுமையான நிதித் தீர்வுகள் மூலம், வர்த்தக சமூகத்தை வலுவூட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளையின் திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி ரஜீவ் டி சில்வா, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் ஊழியர்கள், நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம்.ரம்யா ஜயசுந்தர, நகர சபை செயலாளர் பிரியங்கா சாந்தனி உட்பட அரச அதிகாரிகள், ழுஐஊ மு. யு. ர். P. களுகம்பிட்டிய, பொது சுகாதார பரிசோதகர் நுவான் கெகுலந்தர, கிராம உத்தியோகத்தர் ஜயலத் பெரேரா, தொழிற்சங்கத் தலைவர் கித்சிறி கருணாதாச, அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய கிளை திறப்பு விழா குறித்து சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், ‘நாவலப்பிட்டியானது விவசாயத் துறையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட பிரதேசமாகும். தேயிலை மற்றும் கோப்பி பயிர்ச்செய்கையில் இருந்து மசாலா உற்பத்தி வரை, மக்கள் விவசாயத்தை தங்கள் முதன்மையான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் எங்களது விரிவாக்கம், அவர்களின் தொழில்களை உயர்த்துவதற்கும், அதனால் அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும் மிகவும் தேவையான நிதி உதவியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என்று குறிப்பிட்டார்.
நிறுவனம் குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்க நிதியளிப்பு, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், மற்றும் அதன் தானியங்கு கட்டண வசதியான Smart Pay வரையிலான ஒரு பரந்த தயாரிப்பு போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் ‘சியபதயிலிருந்து பூமிக்கு‘ கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்துடன் ஒத்திசைவாக, சியபதவின் சிரேஷ்ட முகாமைத்துவம் நாவலப்பிட்டியில் உள்ள மாபகந்த ஆரம்பப் பாடசாலையில் விசேட மரநடுகை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. நிறுவனம், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதோடு, சிறுவர்களின் டிஜிட்டல் கற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் கணினிகள் மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 வருடங்களாக, இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற பலருக்கு வலுவூட்டி வருகிறது.
புதிய கிளையுடன் தொடர்பு கொள்ள, நாவலப்பிட்டி, கம்பளை வீதி, இலக்கம் 54 இற்கு விஜயம் செய்யுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி பற்றிய மேலும் தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.