Sunday, November 24, 2024
Home » அஸ்வெசும திட்டத்தின் இரு பிரிவினருக்கு கொடுப்பனவுகள்

அஸ்வெசும திட்டத்தின் இரு பிரிவினருக்கு கொடுப்பனவுகள்

- விசேட கொடுப்பனவை செப்டெம்பர் வரையில் நீடிக்கத் தீர்மானம்

by Prashahini
June 28, 2024 9:20 pm 0 comment

– ரூ, 11.6 பில்லியன் விடுவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை நேற்று (27) விடுவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை மாதத்தில் இருந்து 31.03.2024ஆம் திகதி வரையிலும், இடைநிலைப் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் குழுவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2500 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை மாதம் முதல் 31.12.2023 ஆம் திகதி வரையிலும் கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மற்றும் இடைநிலை பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கொடுப்பனவு வழங்குவதற்கான காலத்தை இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன் கீழ் பாதிக்கப்பட்ட மற்றும் இடைநிலை பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகளை 2024 ஜூலை முதல் 2024 டிசம்பர் வரையில் 5000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிக வறுமை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழானவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் தொடர்ச்சியாக வழங்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும் ஆணையாளருமான ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT